பினாமியை வைத்து சூப்பர் ஸ்டாரையே ஓரம் கட்டும் தந்திரம்..

இந்நிலையில் விஜய் நடத்தும் அண்டர் கிரவுண்ட் பிசினஸ் பற்றிய விஷயம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது
 | 
கடந்த சில நாட்களாகவே விஜய் பற்றி பல செய்திகள் வெளிவந்து பகீர் கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதிலும் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க அவர் மறைமுகமாக பிளான் போட்டு வருவதைப் பற்றி பல மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் நடத்தும் அண்டர் கிரவுண்ட் பிசினஸ் பற்றிய விஷயம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது
அதாவது அவர் தனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் நபர்களை பினாமியாக வைத்து தன்னுடைய படத்தை தயாரித்து வருகிறாராம். அந்த வகையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் தளபதி 67 திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது.
அது மட்டுமல்லாமல் இதன் மூலம் தனக்கான சம்பளம் ஒரு பக்கம் வசூல் லாபத்தில் குறிப்பிட்ட பங்கு ஒரு பக்கம் என நன்றாக கல்லாகட்டியும் வருகிறார். அவருடைய இந்த பிசினஸ் தந்திரத்தை பற்றிய பேச்சு தான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மேலும் இப்படி ஒரு பிளான் மூலம் சூப்பர் ஸ்டாரையே ஓரம் கட்டும் அளவுக்கு விஜய் சைலண்டாக வேலை பார்த்து வருவதாகவும் சலசலக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தளபதி 67க்காக விஜய் போட்டுள்ள பிளான் நிச்சயம் அவருக்கு லாபத்தை தான் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை